செயற்கை மணல் உற்பத்தி





குமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே செயற்கை மணலை உற்பத்தி செய்வதற்கான
குவாரி ஒன்றினை கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அமைத்துள்ளது. மேலும் இந்தக்
குவாரி அமைந்துள்ள இடம் வனப்பகுதியாகும். வனப்பகுதியில் கல்குவாரி எதுவும்
அமைக்கக்கூடாது என்ற சட்டத்தை மீறி இது அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய திருவாங்கூரில் உள்ள போப்ஸ் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் தமிழக
வனப்பகுதியில் ஊடுருவி இத்தொழிற்சாலையை அமைத்துள்ளது. கற்களைப் பொடியாக்கி
மணலுக்குப் பதில் கட்டிட வேலைகளில் பயன்படுத்தத் திட்டமிட்டு தமிழகத்தின்
இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும்
மணலை சுத்திகரிப்பதற்காக கோதையாறு ஆற்றுப்படுகையிலிருந்து நாள்தோறும் 1.5
இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதற்குப்
பொதுப்பணித்துறையின் அனுமதியும் பெறப்படவில்லை. ஆனால் இந்த நிறுவனத்தின்
சட்டவிரோதமான செயலுக்கு தமிழக மின்வாரியம் மின்னிணைப்பு கொடுத்து ஒத்துழைத்து
வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த சட்டவிரோதத் தொழிற்சாலை
செயல்பட்டு நாள்தோறும் 500 லாரிகளுக்கு மேல் செயற்கை மணலை கேரளாவுக்கு அனுப்பி
வருகிறது. தமிழக அதிகாரிகள் இந்தச் சட்டவிரோத செயலை தடுக்க எவ்வித
நடவடிக்கையும் /இதுவரை எடுக்கவில்லை. இதற்கு அமைச்சர் மட்டத்தில் சிலரின் ஆதரவு
இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
thanks to
http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=4&fileName=Mar1-11&newsCount=6

மதுரை பேராசிரியர் கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு அங்கீகாரம்: கெஜட்டில் வெளியீடு

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.


மறுபயன்பாட்டிற்கு வாரத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், டீ கப், தெர்மோகோல் ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தவும், இவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், பேராசிரியர் வாசுதேவன், 2001ல் ஆய்வு மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கவும் முடிவு செய்தார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்காமல், இவற்றை ஜல்லிகளில் கலந்து "பிளாஸ்டிக் கோட்டிங்' கொடுத்து அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்கவும் ஆய்வு செய்தார். பிளாஸ்டிக் தார்ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் தார் ரோடு, கோவில்பட்டியில் 2002ல் போடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடால் ஏற்படும் பயன்கள், தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து 2002-03ல் தமிழக அரசு புத்தகமாக வெளியிட்டது. மத்திய அரசு 2002ல் பிளாஸ்டிக் ரோட்டிற்கு காப்புரிமை வழங்கியது. கிராம வளர்ச்சி துறைமூலம் தமிழகத்தில் 2000 கி.மீ., அதிகமான பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை, கேரளா, சிம்லாவிலும் வாசுதேவன் மேற்பார்வையில் பிளாஸ்டிக் ரோடுகள் அமைக்கப்பட்டன.


காப்புரிமை: தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு அமைக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கேட்டது. ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது 2006ல் புத்தகமாக வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசு 2006ல் காப்புரிமை வழங்கியது. 2002 முதல் 2008வரை இந்தியாவில் போடப்பட்ட பிளாஸ்டிக் ரோடுகளின் தன்மை, பயன்கள், தரம், உழைப்பு, சுற்றுச்சூழல் குறித்து ஆய்வுக்கு இரண்டாம் கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கியதுடன், இவரது அறிக்கையை ஆய்வு செய்த மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பிளாஸ்டிக் ரோடு அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரண ரோட்டிற்கும் பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள், உழைப்புகள் குறித்து (கைடு லைன்) மற்றொரு புத்தகம் வெளியிட்டது. இந்த புத்தகத்தில், இந்தியா முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்பு துறைகளுக்கும் அனுப்பப்பட்டு, அந்த புத்தகத்தில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் தரமானது, நீடித்து உழைக்கக்கூடியது என குறிப்பிட்டுள்ளது.


அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமங்களில் பிளாஸ்டிக் தார்ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்து கொடுத்து, அதற்கான கைடு லைன் வெளியிட்டது. அதில், பிளாஸ்டிக் தார்ரோடு அமைக்க விரும்பும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறைகள், தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினால், செலவில் பாதியை மானியமாக வழங்க இருப்பதாகவும், அதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற பேராசிரியர் வாசுதேவனை அணுகலாம் என கைடு குறிப்பிடப்பட்டிருந்து. சிம்லாவில் பிளாஸ்டிக் ரோடு: அதன்பின் சிம்லாவில் வாசுதேவன் மேற்பார்வையில் 150 கீ.மீ,. ரோடு அமைக்கப்பட்டது. "பிளாஸ்டிக் மறு சுழற்சி கமிட்டியில் டேட்டா புத்தகம் தயாரிக்கும் உறுப்பினராக வாசுதேவனை, கேரள அரசு சேர்த்தது.


தற்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, பிப்.,4ல் வெளியிட்டுள்ள அரசு கெஜட்டில், பிளாஸ்டிக் ரோடு போட தடை இல்லை என்றும், இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்ச்சாலைகள் அமைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.


பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது: இது மகிழ்ச்சி அளிக்கிறது. சாதாரண ரோட்டை காட்டிலும், ஐந்து ஆண்டுகள் கூடுதலாக உழைக்கும். மழைநீர் ஊடுருவி சாலைகள் பாதிப்படைவதில்லை. தேய்மானம் மிக குறைவு. பராமரிப்பு செலவுகள் கிடையாது. தார் பயன்பாடு 10 சதவீதம் குறைவு. ஒரு கி.மீ.,க்கு 50 ஆயிரம்வரை செலவு மிச்சம். கார்பன்டை ஆக்ஸைடால் ஏற்படும் மாசு தவிர்க்கப்படும். தட்பவெட்ப நிலை சீராகும். பிளாஸ்டிக்கை பிரித்துவிடுவதால், குப்பையிலிருந்து உரம் தயாரிப்பது எளிது. இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி ரோடு அமைத்தால், பிளாஸ்டிக்கால் இவ்வுலகிற்கு ஏற்பட்டுவரும் ஆபத்தை நீக்கலாம்.பிளாஸ்டிக் ரோடு அமைக்க விரும்புவோர் 0452 248 2240 அல்லது 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு இதனை சொல்லுங்கள் நண்பர்களே!

5 ஆயிரம் முதலீட்டில் சுகுணா கோழி பண்ணை தொடங்கிய சவுந்திரராஜன் இன்றைக்கு 2000 கோடி மதிப்புள்ள சுகுணா பவுல்ற்றியின் முதலாளி

மிழக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் "நாட்டுக்கோழிகளின் இனம் அழிந்துவருகிறது" ஏன்? என்ற கேள்வியை அமைச்சரிடத்திலே எழுப்பப்பட்டது. அந்த கோழிகளை அரசியல்வாதிகள் நிறைய சாப்பிடுவதால் அழிந்து வருவதாக கூசாமல் பதிலும் சொல்லப்பட்டது. இது பத்திரிகைகளிலும் வந்தது. இதனையடுத்து இந்த பதிவை இங்கு இடுகிறேன்.

என்னதான் விளைந்தாலும் விளைச்சலுக்கு பலன் இல்லை. எல்லாம் இடைத்தரகர்கள் பிடுங்கி கொண்டு போய் விடுகிறார்கள். "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்' என்று சும்மாவா பாடினார்கள் பழைய படத்தில்! பசுமைப்புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கடுமையான ரசாயனங்களை கொட்டி மண்ணை மரணத்திற்கு கொண்டு போய்விட்டார்கள். மண்ணில் இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் மண்ணை உழுது கொண்டிருந்த பாக்டீரியாக்கள் முதல் உழவனின் நண்பனான மண்புழுக்கள் வரை அனைத்தும் மடிந்து போய் மண் மலடியாக மாறி விட்டது.

இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மண்ணிலிருந்து பலனை எதிர்பார்க்கவும் முடியவில்லை. இதனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களும், அது சார்ந்த விவசாயமும் நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து வருகின்றன. விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் எதுவும் புலப்படவில்லை.

ஆக..இப்படி இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு கையில் பணம் புரள ஏதாவது செய்தாக வேண்டும். நகரங்களில் ஐடி கம்பெனிகளில் இரவும் பகலும் கண்விழித்து சம்பாதிக்கும் இளைஞர்கள் உழைத்து பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களை தவிர பிசினஸ் பண்ணும் நபர்களிடமும் பணம் புழங்குகிறது. இது தவிர அரசியல் வாதிகளிடமும், லஞ்சம் வாங்கி கொழுக்கும் அரசு ஊழியர்களிடமும் பணம் புழங்குகிறது. அதாவது சமூகத்தின் வாங்கும் சக்தி அதிகம் உடைய தரப்பினர் இவர்கள் தான்.

இவர்களிடம் எதையாவது விற்க முடிந்தால் அதை விற்பவரின் பாக்கெட்டுக்கு பணம் வந்து நிரம்பும்.மேற்குறிப்பிட்ட இந்த தரப்பினர் அனைவரும் சிக்கனம் பார்க்காமல் செலவழிப்பது சாப்பாட்டுக்குத் தான். சரவணபவனும், திண்டுக்கல் வேலு பிரியாணியும்,ஆரிய பவனும் இவர்களால் தான் அதிகம் நிரம்பி வழிகிறது. சத்து இருக்கிறது என்றால் எதையும் வாங்கி சாப்பிட இவர்கள் முன்வருவார்கள். இவர்களுக்கு எதை விற்பது தான் கேள்வி?
'நாட்டுக் கோழி' என்றாலே முருங்கைக்காய் போல் அந்த விடயத்துக்கு பலத்தை சேர்ப்பது என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இது ஓரளவு உண்மையும் கூடத்தான். ஆனால் நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.

நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.

இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.

இதையெல்லாம் கணக்கில் கொண்டால் நாட்டுக்கோழிகள் பலசாலிகள் தான். இவற்றின் இறைச்சியும் குழம்பும் ருசியாக இருக்கும். அதனால் அரசியல்வாதிகள் இவற்றை ஆயிரக்கணக்கில் கபலீகரம் செய்வதாக பேசப்படுகிறது. இது இருக்கட்டும். இந்த கோழிகளை சாப்பிட சாமானியர்களுக்கும் கசக்குமா என்ன? ஆனால் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விலை அதிகம்.

ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.
இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.

இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி http://greenindiafoundation.blogspot.com/2011/01/blog-post_19.html

வியாபாரம் - கிராமப் பொருளாதாரம்...

கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மற்ற அனைத்தும் அதன் சார்புத்தொழிலாகவும் இருக்கும். என்னதான் வீட்டில் டீ குடித்தாலும் உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை பேசிக்கொண்டே டீக்கடைகளில் அரட்டை கச்சேரி நடத்தினால்தான் பெரிசுகள் திருப்தி அடையும். சிறிய மளிகைக்கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தங்களால் இயன்ற அளவு நகரங்களில் இருந்து மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி வந்து விற்ப்பார்கள். ஓரளவுக்கு தங்களுக்கான அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், எல்லாக்கிராமங்களுமே தங்களின் பெரும்பாலான தேவைகளுக்கு அருகில் உள்ள சிறிய நகரங்களைத்தான் நம்பியிருக்கின்றன.

ஒரு காலத்தில் வார சந்தைகள் மூலமாகத்தான் எல்லாப் பொருட்களும் வாங்கினர்.இப்போது சந்தைகள் ஒழிந்துவிட்டன, தென் தமிழகத்தில் மட்டும் இன்னும் பரவலாக இருக்கிறது. அதே போல ஆடு, மாடுகள் கிராமங்களில் வெகுவாக குறைந்துவிட்டன. மகளீர் சுய உதவிகுழுக்கள் நிறைய கிராமங்களில் இப்போது பொருளாதார ஆதாரங்களை உயிர்ப்பித்தாலும் நமது நாட்டின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கிய கிராமங்கள் மெல்ல நகரங்களின் சாயங்களை பூசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. இதற்க்கு முழு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.

நீங்கள் புதிதாக ஒரு தொழிலை துவங்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏற்ற சரியான இடம் இப்படி கிராமங்கள் சூழ்ந்த சிறு நகரங்கள்தான். இங்கு நீங்கள் ஒரு உணவகமோ அல்லது சிறிய பல்பொருள் வணிகம் செய்யும் அங்கடியோ, வேறு நீங்கள் விரும்புகிற எந்த வியாபாரமோ, அதற்கு இப்படிப்பட்ட இடங்கள்தான் சரியான தேர்வு. பெருநகரங்களில் நீங்கள் வியாபாரம் செய்ய விரும்பினால் அதற்க்கான முதலீடு மிக அதிகம் தேவைப்படும் மேலும் உங்களுக்கான வாடிக்கையாளரை நீங்கள் மெல்லத்தான் பெற முடியும். ஆனால் சிறு நகரங்களில் நீங்கள் தொடங்கும் தொழிலுக்கு உங்கள் கிராமத்து ஆட்கள் அனைவரும் வாடிக்கையாளர் ஆவார்கள். மேலும் சுற்றுவட்டார மக்களும் உங்களுக்கு அறிமுகம் ஆகியிருப்பார்கள் அவர்களும் உங்கள் சேவையின் தரத்தை சரியாக வைத்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

பெரிய நகரங்களில் தொழில் செய்தால் ஆடிக்கு கூழ் ஊத்துகிரவர்கள் முதல் ஐயப்ப பக்தர்கள்வரை வசூல் வேட்டை செய்வார்கள். மேலும் அரசியல்வாதிகள், காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், சில இடங்களில் உள்ளூர் தாதாக்கள் வரை நம்மை ஆதிக்கம் செய்வார்கள், ஆனால் உங்கள் பகுதியில் நீங்கள் வியாபாரம் செய்ததால் உங்களை இம்மாதிரி சில்லறை ஆசாமிகள் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

சிறுநகரங்களில் நீங்கள் எத்தகைய முதலீட்டை செய்வதாக இருந்தாலும் எதிர்காலத்தில் குறைந்தது பத்து கிளைகளாவது துவக்கும் எண்ணத்துடன் ஆரம்பியுங்கள், உங்களது திட்டமிடல் சரியாக அமைந்தால் பெரிய நகரங்களுக்கும் உங்கள் கிளைகளை பரப்பமுடியும். பெரிய நிறுவனம் ஆகிவிட்டால் சிறிய பிரச்சினைகள் உங்களை தொந்தரவு செய்யாது. கிராம மக்களால் இருக்கும் ஒரே தொந்தரவு கடன் கேட்பார்கள், கொடுக்காவிட்டால் குறைசொல்வார்கள். இதற்க்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. ஒன்று: ஆரம்பத்தில் இருந்தே கடன் யாருக்கும் கொடுப்பது கிடையாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பது. இரண்டு: சிறிய அளவில் மட்டுமே கடன் கொடுப்பது அதாவது வராவிட்டாலும் சமாளித்துகொள்ளலாம் என்று நீங்கள் நினைக்கிற அளவு. இந்த வழியால் நல்ல வாடிக்கையாளர்கள் நம்மிடம் தொடர்ந்து வருவார்கள். ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு தடவையோடு நம் பக்கம் திரும்ப மாட்டார்கள்.

இது குறைந்த முதலீட்டுக்கான யோசனை மட்டுமே. மற்றபடி பணம், திறமை, கட்டமைப்பு இம்மூன்றும் இருந்தால் உங்களால் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலைக்கும் சென்று ஜெயிக்கமுடியும்.

several uses of computers: -


  • Word Processing - Word Processing software automatically corrects spelling and grammar mistakes. If the content of a document repeats you don’t have to type it each time. You can use the copy and paste features. You can printout documents and make several copies. It is easier to read a word-processed document than a handwritten one. You can add images to your document.
  • Internet - It is a network of almost all the computers in the world. You can browse through much more information than you could do in a library. That is because computers can store enormous amounts of information. You also have very fast and convenient access to information. Through E-Mail you can communicate with a person sitting thousands of miles away in seconds. There is chat software that enables one to chat with another person on a real-time basis. Video conferencing tools are becoming readily available to the common man.
  • Digital video or audio composition – Audio or video composition and editing have been made much easier by computers. It no longer costs thousands of dollars of equipment to compose music or make a film. Graphics engineers can use computers to generate short or full-length films or even to create three-dimensional models. Anybody owning a computer can now enter the field of media production. Special effects in science fiction and action movies are created using computers.
  • Desktop publishing - With desktop publishing, you can create page layouts for entire books on your personal computer.
  • Computers in Medicine - You can diagnose diseases. You can learn the cures. Software is used in magnetic resonance imaging to examine the internal organs of the human body. Software is used for performing surgery. Computers are used to store patient data.
  • Mathematical Calculations - Thanks to computers, which have computing speeds of over a million calculations per second we can perform the biggest of mathematical calculations.
  • Banks - All financial transactions are done by computer software. They provide security, speed and convenience.
  • Travel - One can book air tickets or railway tickets and make hotel reservations online.
  • Telecommunications - Software is widely used here. Also all mobile phones have software embedded in them.
  • Defense - There is software embedded in almost every weapon. Software is used for controlling the flight and targeting in ballistic missiles. Software is used to control access to atomic bombs.
  • E-Learning – Instead of a book it is easier to learn from an E-learning software.
  • Gambling-You can gamble online instead of going to a casino.
  • Examinations-You can give online exams and get instant results. You can check your examination results online.
  • Computers in Business - Shops and supermarkets use software, which calculate the bills. Taxes can be calculated and paid online. Accounting is done using computers. One can predict future trends of business using artificial intelligence software. Software is used in major stock markets. One can do trading online. There are fully automated factories running on software.
  • Certificates - Different types of certificates can be generated. It is very easy to create and change layouts.
  • ATM machines - The computer software authenticates the user and dispenses cash.
  • Marriage - There are matrimonial sites through which one can search for a suitable groom or bride.
  • News-There are many websites through which you can read the latest or old news.
  • Classmates-There are many alumni websites through which you can regain contact with your classmates.
  • Robotics - Robots are controlled by software.
  • Washing Machines - They operate using software.
  • Microwave Oven - They are operated by software.
  • Planning and Scheduling - Software can be used to store contact information, generating plans, scheduling appointments and deadlines.
  • Plagiarism - Software can examine content for plagiarism.
  • Greeting Cards - You can send and receive greetings pertaining to different occasions.
  • Sports – Software is used for making umpiring decisions. There are simulation software using which a sportsperson can practice his skills. Computers are also to identify flaws in techhnique.
  • Aeroplanes – Pilots train on software, which simulates flying.
  • Weather analysis – Supercomputers are used to analyze and predict weather.

AMWAY

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்ப்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்ப்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.


FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்க்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்க்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.


பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்ப்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்ப்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.



இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்ப்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.


இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.



ஏமாற்றும் வழிகள்:
இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.


நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.


►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).


►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)


மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்


மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.


நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?
► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)


►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)


► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.


இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:


►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.

►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .

►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.


இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.


►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)


100 x 995 = 99500 ரூபாய்


இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.


3000 x 100 = 300000 ரூபாய்

அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).


இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.


இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்க்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.


300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)

இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.


லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.


இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.



இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.

----------------------------x---------------------------


நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம் . - வினையூக்கி

தேங்க்ஸ் டு http://thoppithoppi.blogspot.com/2010/12/amway.html
Labels: 0 comments | edit post

DTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் "கலாச்சாரக் காவலர்களும்" ஏன்...? ஒரு சில "அறிவு ஜீவிகளும்" கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும் அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 6,76,615 தான்.
ஆனால், இந்தியாவில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான்! இன்னும் சரியாகச் சொல்வதனால், கடந்த பத்து ஆண்டுகளில் கடும் பாய்ச்சலைக் காட்டியது இந்தியத் தொலைக்காட்சித்துறை.
இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் காரணமாக அமைந்தன.
1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக நிறுவப்பட்டன.
2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என். ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சிகளும் இந்தியாவில் ஒளிபரப்பைத் துவங்கின.
இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.
1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் பரவலாவதற்குத் தடைகள் இருந்தன.
அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட திட்டத்தை ஒட்டி அமைவதுதான்.
இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது. 1990களில் தொடங்கிய செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில தடையாக இருந்தன. எப்படி?
செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டாலும் செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக இணைப்புப் பெற்று (Up link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.
இந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை வாடகையாகப் பெற்றும் விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிரப்பின.
இதனால் மிகுந்த அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் ஏப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் டிஷ் ஆன்டனாவில் பெற்ப்பட்டு ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
ஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது பெற்றிருந்தது.
இத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதன்மூலம், அவற்றிற்க அந்நியச் செலாவணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் காலதாமதமும் ஏற்பட்டன.
பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 1998-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன.
புதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்களின் பங்கு 80 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டது.
தொலைக்காசி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் மையத்தளமாக சென்னைதான் விளங்கியது.

புதிய ஒளிபரப்புக்கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் சென்னையில் உள்ள வி.எஸ்.என்.எல். நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றுடன், புதிதாக 40 அடி விட்டமுள்ள ஸ்டாண்ட்டர்டு "பி" ஆன்டெனாவை வெற்றிகரமாக சோதித்தது. அதிலிருந்து சென்னை, செயற்கைக் கோள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான இணைப்பு மையமாக மாறியது. இன்று பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றன.
இந்திய அரசு நிறுவனமான வி.எஸ்.என்.எல். இன்டல்சாட் எனும் நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கிறது. இந்த இன்டல் சாட் 150 நாடுகளுக்கு வீடியோ ஒளிபரப்பு மற்றும் தொலைபேசித் தொடர்புகளைத்தரும் 24 செயற்கைக்கோள்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதில் ஐந்து செயற்கைக் கோள்கள் இந்தியப் பெருங்கடலுக்கு மேலிருந்து இயங்குகின்றன.
இன்று இந்தியாவிடம் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு உதவும் ஒன்பது செயற்கைக்கோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் உள்ளன.
இன்று நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் தொலைக்காட்சிகளின் கண்காணிப்பில் இருக்கிறது. அவற்றுக்குத்தேவை ஒரு தொலைக்காட்சிக் கேமராவும் ஒரு சூட்கேஸ் உள்ளே வைத்து எடுத்துச்செல்லக்கூடிய வகையில் வந்துவிட்ட வி.எஸ்.ஏ.டி. (Very Small Aperture Trasmitters) என்ற கருவியுந்தான்.
எட்டுக்கோடி இந்திய இல்லங்களில் (80 மில்லியன்) தொலைக்காட்சிப் பெட்டிகள் இருக்கின்றன. அதில் ஐந்துக் கோடியே 20 இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் (52 மில்லியன்) கேபிள் இணைப்புப் பெற்றவை. ஐரோப்பாவின் அனைத்து நாடுகளை விடவும் இது அதிகம்.
இந்தியாவில் இன்று 20,000 கேபிள் மையங்களிலிருந்து 40,000 கேபிள் முகவர்கள் செயல்படுகின்றனர்.
மாநில மற்றும் சிறு வட்டார மொழிகள் உட்பட இந்தியாவில் 27 மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நிகழ்கின்றன. மேலும் 20 செயற்கைக்கோள்களில் உள்ள 200 டிரான்ஸ் பாண்டர்கள் மூலம் 300 மின்னணுத் தொலைக்காட்சி அலைவரிசைகளை இன்று இந்தியாவில் காண இயலும்.

இன்றைய தேதியில் இந்தியாவில் 150 நிறுவனங்களுக்கு 400 செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 180 தொலைக்காட்சிகளின் விண்ணப்பங்கள் மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.
ஓராண்டில் இந்தியக் கேபிள் டிவி சந்தையில் புழங்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 9,000 கோடி ரூபாய்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 60 இலட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்ததாக கணக்கிடப்பட்டது. தொலைக்காட்சிகளின் பெருக்கம் அதிகமான கடந்த 7 ஆண்டுகளில், மேலும் 60 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். தற்போது தமிழக அரசு 80 இலட்சம் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும் திட்டமொன்றை செயல்படுத்தி வருகிறது. ஆக தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள மொத்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கை 2 கோடி. ஒரு கேபிள் இணைப்பிற்கு ஒரு சந்தாதாரர் செலுத்தும் தொகை குறைந்த பட்சம் ரூ.100/- என்றால் 2 கோடி தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கு மாதாந்திரம் வசூலாகும் தொகை ரூ. 200/- கோடி. இதுவே ஆண்டொன்றிற்கு ரூ.2400/- கோடி. செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளை பெற்று விநியோகிக்கும் கேபிள் டிவி சந்தையில் மட்டும் தமிழகத்தில் ஓராண்டில் புழங்கும் தொகை ரூ. 2500/- கோடி என்றால் மலைப்பாய் இருக்கிறது அல்லவா... இந்த அமோக பண விளைச்சல் ஏற்படுத்தும் விளைவுகளைத்தான் அண்மைக்கால தமிழக அரசியலாய் நாம் பார்த்துவருகிறோம்.
சென்னையில் மட்டும் 12 இலட்சம் இணைப்புகள் இல்லங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஒரு இணைப்பிற்குச் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய் என்றால் முகவர்கள் ஈட்டும் மொத்தத் தொகை 12 கோடி ரூபாய்.
கேபிள் டி.வி சந்தையில் புழங்கும் அபரிமிதமான பணப்பெருக்கமே இங்குப் பல்வேறு சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் காரணமாக இருக்கிறது.
அரசியல் செல்வாக்குப் பெற்றோரும் சட்டவிரோதக் கும்பல்களும் இத்தொழிலைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவந்து விட்டனர். புதுதில்லியில் கேபிள் டி.வி முகவர் ஒருவர் 10 கோடிக்கும் மேல் வருமான வரி ஏய்ப்புச் செய்திருந்ததை வருமானவரிப் புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன. தமிழகத்திலும் கேபிள் டி.வித் தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பாகத் தொடர்க் கொலைகள் நடந்தேறுகின்றன.
கேபிள் டி.வி முகவர்கள் ஓர் இணைப்புக்குக் குறைந்த பட்சம் ரூ.75/- முதல் அதிகபட்சமாக ரூ.300/- வரை மாதச் சந்தாவாக வசூலித்து வந்தனர்.
சிறு மற்றும் பெரு நகரங்களில் அதிகப்படியாகச் சந்தாத்தொகை செலுத்தும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கேபிள் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக ஒவ்வொரு முகவரும் அதிகப்படியான தொலைக்காட்சி அலைவரிசைகளைத் தரத் தலைப்பட்டனர். அவர்கள் வாங்கும் கருவிகள், உபகரணங்களுக்கான செலவுத் தொகை நுகர்வோர் தலைமீது விழுந்தது. மேலும், கேபிள் தொழிலில் செல்வாக்குப் பெற்றோர் தனி ஒருவராக ஆதிக்கம் செலுத்தி, வரைமுறை எதுவுமின்றி கட்டணம் வசூலித்து வந்தனர்.
மாதந்தோறும் தொடரும் இந்தக் கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியுறவே, மத்திய அரசு இதில் தலையிடும் கட்டாயம் ஏற்பட்டது.
கேபிள் டி.வி தொழிலை ஒழுங்குபடுத்தி முறைப்படுத்தும் பொறுப்பை Telecom Regulatory Authority எனப்படும் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்திடம் விட்டது.
ஆயினும் ஒரு பொருளின் மீது அல்லது சேவையின் மீது பொதுமக்களின் நேரடி நுகர்வே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தரும் அத்தகைய தீர்வு எது?
காற்றில் உலாவரும் ஒலி அலைகளை உள்வாங்கிச் செயல்படும் வானொலி போன்றே, ஒலியோடு (Sound) ஒளியையும் (Vision) உள்வாங்கி வெளிப்படுத்தும் சாதனமே தொலைக்காட்சி.
துவக்கக்கால வானொலிப் பெட்டிகள், உயரமான இடங்களிலிருந்து ஏரியல் அல்லது ஆன்டெனா மூலமே ஒலி அலைகளை கம்பி மூலம் உள்வாங்கி வெளிப்படுத்தின. பிறகு வானொலித் தொழில் நுட்பம் மேம்படுத்தப்பட்டு, அக்கருவி நவீனப்படுத்தப்பட்டது. இன்றைக்கும் இந்திய நகரங்களில் இருபத்தைந்தே ரூபாய்க்கு விற்கும் சிறிய வானொலிப் பெட்டிகள், சிற்றலை பண்பலை எதுவானாலும் ஏரியலோ ஆண்டெனாவோ எதுவுமின்றி சிறப்பாகவே செயல்படுவதை வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும்.
1990-ஆம் ஆண்டுக்கு முன் நமது தொலைக்காட்சிப் பெட்டியின் ஆன்டெனா, தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்புக் கோபுரத்திலிருந்து ஒலி-ஒளி அலைகளைப் பெற்று நமது வீடுகளில் ஒளிபரப்பியது.
இதுவே, ஒளிபரப்புக் கோபுரங்களிலிருந்து மட்டுமல்லாமல், செயற்கைக்கோள் வழியே பெறப்படும் ஒலி-ஒளி அலைகளைப் பெற்றுத்தரச் சற்று சக்திமிக்க நவீனமான ஆன்டெனாக்கள் தேவை. முன்பு நீளவாக்கில் இருந்த ஆன்டெனாக்கள் இப்போது சிறு குடை வடிவில் (Dish Antena) அவ்வளவு தான் வித்தியாசம்.
இதன் பயன்பாட்டைப் பரவலாக்கும் நோக்கோடு இந்திய அரசு கடந்த 2004-ஆம் ஆண்டு இறுதியில் தனது ஒளிபரப்புக் கொள்கையில் இன்னொரு மாற்றத்தை அறிவித்தது.
அது விண்ணிலிருந்து வீட்டிற்கு (Diret to Home) திட்டம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாலுணர்வைக் தூண்டும் தொலைக்காட்சி தவிர, மற்ற தொலைக்காட்சிகளை, யாருடைய குறிக்கீடும் இன்றி நீங்களே உங்கள் இல்லத்தில் கண்டு களிக்கமுடியும்.
DTH எனப்படும் விண்ணிலிருந்து வீட்டிற்கு எனும் தொழில் நுட்பம் எவ்விதம் செயல்படுகின்றது?
தரை நிலையங்களிலிந்து அனுப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள்களைச் சென்றடைந்துப் பின் நமது வீட்டு டிஷ் ஆன்டெனாக்கள் அவற்றை உள்வாங்கி, நமது வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குத் தருகிறது.
இதற்குத் தேவைப்படுவதெல்லாம் சிறிய வடிவிலான டிஷ் ஆன்டெனாவும், ஒரே கற்றையாக வரும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்க டிஜிட்டல் டிகோடர் எனப்படும் செட்டாப் பாக்ஸீம் தான்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் இறங்கித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டது போலவே, டி.டி.எச்., தொழில் நுட்பத்திலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறது.
இந்த வகையில், இந்தியாவில் இத்துறையில் முதலாவதாக நுழைந்த நிறுவனம் ஜி தொலைக்காட்சிக்குழுமம் இதற்கென டிஷ் டிவி (Dish TV) என்ற நிறுவனத்தை அது துவக்கியுள்ளது. இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளின் தேவைகளுக்கு ஏற்ப, அந்தந்த நுகர்வோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் திட்டம் ஒன்றை தயாரிக்கிறது. எப்படி? த்மிழ்நாடு என்றால் தமிழ்த் தொலைக்காட்சிகளோடு என்.டி.டி.வி, சி.என்.என். பிபிசி, ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், கார்ட்டூன் நெட்ஒர்க், பேஷன் டிவி முதலான 80 தொலைக்காட்சிகளைத் தருகிறது. இதற்கென ஆன்டெனா மற்றும் டிகோடர், பார்வையாளர் தெரிவைப் பதிவு செய்துச் செயல்படுத்தும் வி.சி.கார்டு (Viewing Card) போன்ற உபகரணங்களை நிறுவி, அதன் செலவுத் தொகையை, மாதக் கட்டணமாக வசூலித்துக் கொள்கிறது. ஜி.டி.வி இவ்விதம் அது நிர்ணயித்துள்ள மாதக்கட்டணம் ரூ. 120/- ஆகும்.
Tata Sky நிறுவனமும் டி.டி.எச். சேவையில் நுழைந்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களுக்கெனத் தனித் தொழில் நுட்பம் மற்றும் தொலைக்காட்சிச் சேவைகளையும் மாதாந்திர கட்டணத்திற்கு வழங்கி வருகிறது.
தனியாருக்கான நுகர்வுச் சேவையில், அரசு நிறுவனமான தூர்தர்ஷன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. ரூபாய் 160 கோடி முதலீட்டில் நாட்டின் சில பகுதிகளில் இத்திட்டத்தைத் செயல்படுத்தி வருகிறது தூர்தர்ஷன்.
தூர்தர்ஷன் டைரக்ட் பிளஸ் என்ற அதன் திட்டத்தில் தூர்தர்ஷனின் 17 அலைவரிசைகளும் 13 தனியார் தொலைக்காட்சிகளும் அடங்கியுள்ளன. தூர்தர்ஷன் இந்த D.T.H. திட்டத்தில் அனைத்து உபகரணங்களையும் மொத்தமாகப் பெற ரூ.2500- 3000 வரையே ஆகும்.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி மற்றும் கேபிள் டிவி சந்தை இரண்டிலும் ஏகபோக உரிமை பெற்றிருந்த சன் குழுமம், சமீபத்தில் அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து DTH- தொழிலில் இறங்கப் தள்ளப்பட்டது. SUN DIRECT DTH என்ற அதன் திட்டத்தில் பொழுதுபோக்கு-திரைப்படம் விளையாட்டு இசை-அறிவியல் கல்வி என பல தொலைக்காட்சி தொகுப்புகள் தரப்பட்டு அதற்கேற்ப மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இனி, காடு-மலை-கடல் என எங்கும் ஒரு நேயர் நேரடியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணமுடியும்.
நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் உங்கள் கை வசமுள்ள உபகரணங்களே போதும்.
அனலாக் முறையில் செயல்படும் கேபிள் டி.வி போல் அல்லாமல், ஒலியும்-ஒளியும் எந்த விரயமும் இன்றி மிகத் துல்லியமாக டிஜிட்டல் வடிவத்திலேயே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் கிடைக்கும்.
விண்ணிலிருந்து வீட்டுக்கு எனும் டி.டி.எச். ஒளிபரப்பிற்காகவே தனிச் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இந்தியா ரூபாய் 210 கோடி ரூபாய்ச் செலவில், 3025 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 12 ஆண்டுகள்.
தொலைக்காட்சித் துறையில் ஆர்வம் உள்ளோர், அதன் தொழிலில் உள்ள முன்னேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களும், அவசியம் காணவேண்டியது, ஸ்கேட் இண்டியா (SCAT INDIA) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் மும்பையில் நடத்துகிற கண்காட்சியாகும்.
இந்திய அரசின் வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (Indian Trade Promotion Organisation) இந்தக் கண்காட்சியில், 15-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கெடுக்கின்றன. உலகெங்கிலுமிருந்த 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை முன் வைக்கின்றன.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் விளைச்சலை நீங்கள் அங்கு காணமுடியும்.

நன்றி: தமிழர் கண்ணோட்டம்
Labels: 0 comments | edit post