தமிழக அரசு நிறுவனம் விற்ற பதினாறு டன் மூலிகை வயாகரா


தமிழக அரசின் டாம்கோல் நிறுவனம் புதிதாக மூலிகை வயகரா ஒன்றை வெளியிட்டுள்ளது. லபூப் சகீர் என்பது இதன் பெயர். அல்வாவைப் போன்ற ரொம்ப டேஸ்டா இருக்குதாங்க. (அட, நிஜமாவே நான் இன்னும் சாப்பிட்டு பாக்கலைங்க…). வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே ஸ்டாக்கும் தீர்ந்து, மூலப் பொருட்களும் தீர்ந்து போயிடுச்சாம். அவ்வளவு டிமாண்டு.


முதலில் ஏப்ரலில் கடைகளில் வந்தபோது அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வாங்கியவர்கள் ‘அனுபவத்தில்’ அசந்து போய், விஷயம் பரவ ஆரம்பித்தது. பெரிதாக விளம்பரம் இல்லாமலேயே, இரண்டே மாதங்களில் பதினாறு டன் லபூப் சகீர் விற்று தீர்ந்து விட்டதாம். இப்போது டாம்கோல் நிறுவனத்தில் இதற்காகவே ஆட்கள் ராப்பகலாக லபூப் சகீர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.

இது ஒரு யுனானி மருந்து. விலை மிகவும் குறைவு – முப்பது ரூபாய் தான் என்று சொல்கிறார்கள். இதில் பாதாம், பிஸ்தா, மற்றும் உலர வைக்கப் பட்ட பழங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிரதாம். இப்போது இதன் ‘மகிமை’ வெளிநாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது.

இது குறித்து சட்டசபையில் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ் செய்தி:

சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது. அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.

பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.

அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.

நன்றி :http://thillana.wordpress.com/2009/06/30/laboob_sageer/