செயற்கை மணல் உற்பத்தி
8:27 AM
குமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகே செயற்கை மணலை உற்பத்தி செய்வதற்கான
குவாரி ஒன்றினை கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அமைத்துள்ளது. மேலும் இந்தக்
குவாரி அமைந்துள்ள இடம் வனப்பகுதியாகும். வனப்பகுதியில் கல்குவாரி எதுவும்
அமைக்கக்கூடாது என்ற சட்டத்தை மீறி இது அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய திருவாங்கூரில் உள்ள போப்ஸ் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் தமிழக
வனப்பகுதியில் ஊடுருவி இத்தொழிற்சாலையை அமைத்துள்ளது. கற்களைப் பொடியாக்கி
மணலுக்குப் பதில் கட்டிட வேலைகளில் பயன்படுத்தத் திட்டமிட்டு தமிழகத்தின்
இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும்
மணலை சுத்திகரிப்பதற்காக கோதையாறு ஆற்றுப்படுகையிலிருந்து நாள்தோறும் 1.5
இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதற்குப்
பொதுப்பணித்துறையின் அனுமதியும் பெறப்படவில்லை. ஆனால் இந்த நிறுவனத்தின்
சட்டவிரோதமான செயலுக்கு தமிழக மின்வாரியம் மின்னிணைப்பு கொடுத்து ஒத்துழைத்து
வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த சட்டவிரோதத் தொழிற்சாலை
செயல்பட்டு நாள்தோறும் 500 லாரிகளுக்கு மேல் செயற்கை மணலை கேரளாவுக்கு அனுப்பி
வருகிறது. தமிழக அதிகாரிகள் இந்தச் சட்டவிரோத செயலை தடுக்க எவ்வித
நடவடிக்கையும் /இதுவரை எடுக்கவில்லை. இதற்கு அமைச்சர் மட்டத்தில் சிலரின் ஆதரவு
இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
thanks to
http://www.thenseide.com/cgi-
Post a Comment