ஆறே நாட்களில் ஒரு ட்ராக்டர் செய்ய முடியும்!...

மார்சின் ஜகுபோவ்ச்கி இப்படி அவர் பெயரை எழுதுவது சரியா எனத்தெரியாததால் ஆங்கிலத்திலேயே இனி தொடராலாம். Marcin Jakubowski விவசாயம் செய்ய ஆசைப்பட்டு ஒரு பழைய ட்ராக்டரை வாங்கி அதனை மிகுந்த செலவில் ரிப்பேர் செய்து பண்ணையில் ஓட்டினால் மறுபடி ரிப்பேர். இது ஒரு கட்டத்தில் கட்டுப்படி ஆகாமல் போகவே, இதற்க்கான மாற்று வழியாக எளிய தேவையற்ற உபகரணங்களைக் கொண்டு சொந்த முயற்சியில் ஒரு ட்ராக்டரை வடிவமைத்திருக்கிறார். அது வெற்றிகரமாக கைகொடுக்கவே இப்போது கிட்டத்தட்ட ஐம்பது எளிய கருவிகளை கண்டுபிடித்து அது எல்லோருக்கும் உபயோகமாகட்டும் என அதன் விபரங்களை OPEN SOURCE ஆக கொடுத்து இருக்கிறார்.

நன்றி :http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_27.ஹ்த்ம்ல்


காற்றாலைகளுக்கு ரூ 1200 கோடி பாக்கி வைத்த மின்வாரியம்

தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இவர்களுக்கு ரூ 1200 கோடியை அரசு பாக்கி வைத்துள்ளதால், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை, நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.

காற்று சாதகமாக உள்ள போதுதான் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி சாத்தியமாகும்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரையுள்ள 6 மாத காலத்தில் காற்றாலைகளின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதமும், மீதி 15 சதவீத மின்சாரம், அக்டோபர் முதல் ஏப்ரல் வரையுள்ள காலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சொந்த தொழிற்சாலைகள்:

தமிழகத்தில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்கள் தாங்களே சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்துள்ளன. மீதி 50 சதவீத காற்றலை நிறுவனங்கள் தொழிற்சாலைகளை வைத்திருக்கவில்லை.

தொழிற்சாலைகள் வைத்துள்ள காற்றாலை நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கு கொடுத்து விட்டு அதே தொகைக்கு தங்கள் தொழிற்சாலைக்கு தேவைப்படும் மின்சாரத்தை எடுத்துக் கொண்டு அதற்கான பில் செலுத்துவதில்லை.

தொழிற்சாலை இல்லாத காற்றாலை நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அப்படியே மின்சார வாரியத்திற்கு கொடுத்து விடுகின்றன.

அப்படிக் கொடுக்கப்பட்ட மின்சாரத்துக்குதான் இதுவரை ரூ 1200 கோடியை பாக்கியாக வைத்துள்ள மின்சார வாரியம்!

கூடுதலாக 1000 மெகாவாட்:

கடந்த 2009-ம் ஆண்டு 2200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வந்த காற்றாலைகள் 2010-ம் ஆண்டு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

அதற்கேற்றாற் போல கூடுதலாக காற்றலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மின்சார வெட்டு குறையும் என்று தெரிகிறது.

ஆனால் கடந்த 10 மாதங்களாக உரிய முறையில் பணம் கொடுக்காததால், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினருமான கே.கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், " கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் வரைதான் மின்வாரியம் காற்றாலை மின்சாரத்துக்கான தொகையை பட்டுவாடா செய்யதுள்ளது. அதன்பிறகு பணம் செலுத்தவில்லை. மின்சார வாரியம் இன்னும் ஆயிரத்து 200 கோடி ரூபாயை காற்றாலைகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டும்.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கி காற்றாலைகளை அமைத்தவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு மின்சார வாரியத்தில் போதிய நிதி இல்லாததால் பணத்தை பட்டுவாடா செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறைந்த தொகைதான்...

காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு தமிழக மின்சார வாரியம் 2 ரூபாய் 75 பைசா தருகிறது. 2006-ம் ஆண்டுக்கு முன்பு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2,75-ம், 2006 முதல் 2009 வரை காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.95-ம், 2009-க்கு பிறகு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.39-ம் தமிழக மின்சார வாரியம் வழங்கி வருகிறது.

ஆனால் மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் காற்றாலை மின்சாரத்துக்கு அதிக தொகை வழங்குகின்றன. மற்ற மாநிலங்களில் காற்றாலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மார்க்கெட்டில் ஒரு யூனிட் ரூ.6 முதல் ரூ.15 வரை விற்கிறார்கள். இது போன்ற நிலைமை தமிழகத்தில் இல்லை.

எனவே காற்றாலைகளுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி பாக்கி வைத்துள்ள மின்சார வாரியம் அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேனி, தென்காசி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கும் உதவ வேண்டும்",என்றார்.

கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உடனே மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியம், அந்த மின்சாரத்தையே உற்பத்தி செய்பவர்களுக்கு 10 மாதங்களாக பாக்கி வைத்திருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மின் உற்பத்தியாளர்கள்!
தங்க டு http://thatstamil.oneindia.in/news/2011/04/25/eb-due-rs-1200-cr-pending-wind-mill-owners-aid0136.html

அறிவியல் :- இனி...கடல்நீர் எரிபொருள்..!

John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!

முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்... தீ..ப்..ப..ற்..றி.. எ..ரி..ய.. ஆ...ர.. ம்பித்தது..!!


பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!


கீழ்க்காணும் வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.
இச்சோதனையை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.

டிஸ்கி :-

இனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா..? 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை..! காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்..! ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்..? அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா..? ஒரு லோடு லாரி அரிசியை நூறு ரூபாய்க்கு வாங்கி அதை மாவாக்கி பத்து மில்லியன் இடியாப்பம் செய்து விற்று பில்லியனராக வேண்டாமா..? என்னா சகோ..!

முதலில் பூமியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ..! அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு தவிக்கும்போது, ஆபத்பாந்தவனான அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... " 4-5-6 (!?)ஒப்பந்தத்தில் " அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..!

ஆனால், ஒருவிஷயம்...! பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்..! அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான "குருட் கடல்நீர்" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்..! கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்..! அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..! After all we are all CITIZENS OF THIS WORLD..!
thanks to http://pinnoottavaathi.blogspot.com/2011/04/blog-post_10.html

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ்

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் (FM)1

சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ் போன்ற சிப்ஸ் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த யுட்யுப் வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்

எப்படி தயாரிக்கிறார்கள் MOVIE சிடிக்கள்

எப்படி தயாரிக்கிறார்கள் MOVIE சிடிக்கள் (FM)4
நம் சின்ன சிடி விஷயம் என நினைக்கும் இதை முழுவதும் கை படாமல் தொழில் நுட்ப விஷயங்கள் பயன்படுத்தி தயாரிக்கும் முறை வரே வா! CD ரெகார்டிங் முதல் பேக்கிங் பிரிண்டிங் என எல்லாம் ஆட்டோமேடிக் ஒரு முறை பாருங்கள்


திருட்டு சிடி வாங்கும் முன் ஒரிஜினல் சிடி தயாரிக்க இவர்கள் செய்யும் தரமான விசயங்களை பாருங்கள்

இந்த பதிவுடன் பேக்டரி மேட் எப்படி தயாரிக்கிறார்கள் என்ற பதிவுக்கு கொஞ்ச நாள் ரெஸ்ட் மீண்டும் சமுகம் மாற்றும் சினிமா

எப்படி பலூன்தயாராகிறது

எப்படி பலூன்தயாராகிறது - (FM)2


சின்ன பலுன் என்று நாம் நினைக்கும் விஷயத்தை இவர்கள் எப்படி பாதுகாப்பு முறைகள் பின்பற்றி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் பலூன் பெரும்பாலும் குழந்தைகள் பயன்படுத்தும் விஷயம் எனவே இவர்கள் அதற்காவே சுகாதார விசயத்திற்கு முன்னுரிமை கொடுத்து இந்த பலுனை தயார் செய்கிறார்கள்