கடல் நீரோட்டங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தல்

தலை மன்னார் பகுதிகள் பாக்கு நீரிணையின் ஒடுக்கமான பகுதிக்குள் வருகின்றன. இந்த பாக்கு நீரிணையானது வட கிழக்காக வங்காள விரிகுடாவினுள் விரிகின்றது. தென்மேற்காக இந்து சமுத்திரத்தினுள் திறக்கின்றது. இவ்விரு திறந்த நீர்பரப்புகளும் நமது தீவுப்பகுதிகளை அண்டி ஒடுங்குகின்றன. இது ஒரு புனலின் ஒடுக்கமான பகுதிக்கு ஒப்பிடலாம்.


இவ்விரு திற‌ந்த‌ பாரிய‌ நீர் ப‌ர‌ப்புக‌ளை இணைத்து ந‌ம‌து தீவுப் ப‌குதிகளிற்கூடாக கடல் நீரோட்டம் ஓடுகிறது.

இந்த‌ சமுத்திர நீரோட்டமானது ஆண்டு முழுவதும் ஓடுகின்றது. இந்த நீரோட்டங்களால் கடத்தப்படும் சக்தி அளவற்றது. சேது சமுத்திர திட்டம் வெற்றி பெற்றால் இந்த நீரோட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும்.

ஆறுக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி மின் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌து அறிந்த‌தே. இந்த‌ ச‌முத்திர‌ நீரோட்ட‌ங்க‌ள் இப்ப‌டியான‌ ஆறுக‌ள் ப‌ல‌வ‌ற்றிற்கு ச‌மான‌மான‌வையாகும். இதிலிருந்தே இவ‌ற்றின் மின் உற்ப‌த்தி வ‌லு என்ன‌ என்று க‌ணித்துக் கொள்ள‌லாம்.

தீவுப்பகுதிகளிற்கிடையேயான ஒடுங்கிய கடற்பரப்புகள் இந்த இயக்கச் சக்தியை மின் சக்தியாக மாற்றக் கூடிய விசிறிகளைப் (Turbines) பொருத்தகூடிய தளங்களை வளங்கும்.

இந்த திட்டம் பற்றி போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நமது தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செயக்கூடிய வளம் எம்மிடம் உள்ளது.


க‌ட‌லில் பாவிக்க‌க்கூடிய‌ சில Turbine களை கீழுள்ள‌ ப‌ட‌ங்க‌ளில் காண‌லாம்.









THANKS TO http://www.yarl.com/forum3/index.php?showtopic=48071