சிமெண்ட் விலை குறைப்பு: முதல்வருடன் ஆலை அதிபர்கள் ஆலோசனை!

Vote this article
Up (0)
Down (100)
Ads by Google
PMI Ash Technologies www.pmiash.com
The Leader in Fly Ash Technologies Why Landfill when you can Recycle
சென்னை: சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு சிமெண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர் கருணாநிதி [^] .

இதுகுறித்து இன்று தலைமைச் செயலகத்தில் சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் ஆலோசனையும் நடத்தினார் முதல்வர் கருணாநிதி.

இக்கூட்டத்தில் அரசின் சார்பாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் எஸ். மாலதி ஆகியோரும், சிமெண்ட் உற்பத்தியாளர்களின் சார்பாக மெட்ராஸ் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா, செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் [^] எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.என். பிரபாகர், அந்நிறுவன இயக்குநர் எம். ரகுபதி, இண்டியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி, துணை பொது மேலாளர் நாகேஸ்வர ராவ், ஜுவாரி சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் குட்டி, கிராசிம் சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இணை செயல் தலைவர் எஸ்.சி. பட்டீல், ஏ.சி.சி. சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் (வணிகம்) விசுவநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பொது மக்களின் நலன் கருதி சிமெண்ட் விலையை உடனடியாகக் குறைக்க சிமெண்ட் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டுமென்று அரசின் சார்பாகக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்பிரச்சினை சம்பந்தமாக தாங்கள் ஒன்றுகூடி, விவாதித்து, நல்ல முடிவை அரசுக்குத் தெரிவிப்பதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துச் சென்றனர்
0 Responses

Post a Comment