கடல் நீரோட்டங்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தல்
இவ்விரு திறந்த பாரிய நீர் பரப்புகளை இணைத்து நமது தீவுப் பகுதிகளிற்கூடாக கடல் நீரோட்டம் ஓடுகிறது.
இந்த சமுத்திர நீரோட்டமானது ஆண்டு முழுவதும் ஓடுகின்றது. இந்த நீரோட்டங்களால் கடத்தப்படும் சக்தி அளவற்றது. சேது சமுத்திர திட்டம் வெற்றி பெற்றால் இந்த நீரோட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும்.
ஆறுகளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுவது அறிந்ததே. இந்த சமுத்திர நீரோட்டங்கள் இப்படியான ஆறுகள் பலவற்றிற்கு சமானமானவையாகும். இதிலிருந்தே இவற்றின் மின் உற்பத்தி வலு என்ன என்று கணித்துக் கொள்ளலாம்.
தீவுப்பகுதிகளிற்கிடையேயான ஒடுங்கிய கடற்பரப்புகள் இந்த இயக்கச் சக்தியை மின் சக்தியாக மாற்றக் கூடிய விசிறிகளைப் (Turbines) பொருத்தகூடிய தளங்களை வளங்கும்.
இந்த திட்டம் பற்றி போதுமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நமது தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செயக்கூடிய வளம் எம்மிடம் உள்ளது.
கடலில் பாவிக்கக்கூடிய சில Turbine களை கீழுள்ள படங்களில் காணலாம்.
THANKS TO http://www.yarl.com/forum3/index.php?showtopic=48071


READ MORE...
உலகை மிரட்டும் குடிநீர்ப் பற்றாக்குறைபல்வேறு பகுதிகளில் தொடரும் வறட்சிகள், மக்கள் பெருநகரங் களுக்குக் குடிபெயர்தல், தொழில் வளர்ச்சி ஆகிய காரணங்களால் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. உலகத் தண்ணீர்த் தேவை ஒவ் வொரு 20 ஆண்டுகளிலும் இரண்டு மடங்காகிக் கொண்டு வருகிறது. மக்கள் தொகை வளரும் வேகத் தைப் போல் இது இரு மடங்கு. 2025-இல் குடிநீர்த் தேவை, கிடைக் கும் அளவைவிட 56 சதவீதம் கூடுத லாக இருக்கும் என மதிப்பிடப்பட்டி ருக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு மக் களை மேலும் மேலும் சிரமத்துக்குள் ளாக்கி வரும் இச்சூழலில் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. குடிநீர்ப் பற்றாக்குறை பொருளாதார வளர்ச்சியைப் பாதிக் கிறது. வாழ்க்கைத் தரத்தை மோச மாக்குகிறது. எனவே இந்த விலை மதிப்பற்ற இயற்கை வளத்தைப் பெருக்குவதைப் பற்றியும் திறமை யாக நிர்வகிப்பதைப் பற்றியும் நாம் விழிப்புணர்வு பெற வேண்டியிருக்கிறது.
கடல் நீரைக் குடிநீராக்குதல்கடல் நீரைக் குடிநீராக்குவதென் பது இப்பிரச்சனையைத் தீர்ப்பதில் ஒரு முக்கிய பங்கினை ஆற்ற முடி யும். சென்னை மாநகர மக்களின் குடிநீர்த்தேவையை ஓரளவுக்கு நிறைவேற்ற மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை செயல்படத் தயாராகி விட்டது. இதன் மூலம் மாந கர மக்களுக்கு தினசரி 100 மில் லியன் லிட்டர் நல்ல தண்ணீர் கிடைக்குமென்று தலைமைச் செய லாளர் அறிவித்துள்ளார். இதே போன்ற இன்னோர் ஆலையை நெம்மேலியில் நிறுவ ஏற்பாடு நடந்து வருகிறது.
காய்ச்சி குளிர்வித்தல்
கடல் நீரைக் குடிநீராக்க இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, காய்ச்சி குளிர்வித்தல்(னளைவடைடயவiடிn). நீரை ஆவியாக்கி பின்னர் குளிர்விப் பதுதான் `காய்ச்சி குளிர்வித்தல்’ எனப்படுகிறது. நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் சூரியவெப்பத்தி னால் ஆவியாகி பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழிவதை காய்ச்சி குளிர்விக்கும் முறைக்கு உதாரண மாகக் கொள்ளலாம். தண்ணீரைச் சூடுபடுத்தும்போது கொதிநிலை வரும்வரை வெப்பநிலை உயர்ந்து கொண்டே வரும். கொதிநிலையை அடைந்தபிறகு நீரை ஆவியாக்கவும் வெப்பம் தேவை. கொதிநிலையில் உள்ள நீரை ஆவியாக்கத் தேவைப் படும் வெப்பம் `உள்ளுறை வெப்பம்’ எனப்படுகிறது. நீரை ஆவியாக்க, உறைநிலையிலிருந்து கொதிநிலை வரை நீரைக் கொதிக்க வைக்கத் தேவைப்படும் வெப்பத்தைப் போல ஐந்து மடங்கு வெப்பம் தேவை. ஆவியாக்கலையும் குளிர்வித்தலை யும் தனித்தனியாகச் செய்தால் செலவு கூடுதலாக ஆகும். எனவே, நீராவியைக் குளிர்விக்கும்போது கிடைக்கும் வெப்பத்தில் ஒரு பகுதி யை, கடல் நீரை ஆவியாக்கத் தேவைப்படும் வெப்பமாகப் பயன் படுத்தி செலவைக் குறைக்கிறார்கள்.
ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்
இரண்டாவது முறை, எதிர்திசை சவ்வூடுபரவல்- `ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்’ எனப் படுகிறது. அடர்த்தி குறை வான கரைசல் ஒருவழிப் பாதையாகச் செயல்படும் ஒரு சவ்வில் (ளநஅi-யீநசஅநயடெந அநஅசெயநே) உள்ள நுண்ணிய துவாரங்கள் வழியாக அடர்த்தி அதிகமாக உள்ள கரைசலை அடைவதற்கு (சவ்வூடுபரவல்) `ஆஸ்மாசிஸ்’ என்று பெயர். மண்ணிலிருந்து நீரையும் தாதுப் பொருட் களையும் செடிகொடி கள் உள் வாங்கிக் கொள்வது, நம் உட லில் உள்ள இரத்தத்தி லிருந்து ஊட்டச்சத்துக்கள் செல்களுக் குச் செல்வது எல்லாமே ஆஸ் மாசிஸ் முறையில்தான். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் ஒருவழிப்பாதை சவ்வு சுத்தமான நீரை அனுமதிக் கிறது. ஆனால் அசுத்தமான பொருட்களை சவ்வு அனும திக்காது. சவ்வை நோக்கி நீரைத் தள்ள ஒரு விசை தேவைப்படும். இந்த முறையில் சவ்வின் மறுபுறத்தில் சுத்தமான நீர் கிடைக்கும். சவ்வின் இந்தப் பக்கத்தில் உள்ள அசுத் தமான பொருட் களும் உப்புக் களும் வெளியேற்றப்படும். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறை யில் பாக்டீரியா, வைரஸ்களை அகற்றிவிட இயலும். வேறு உயிரியல் அசுத்தங்களை (biடிடடிபiஉயட உடிவேயஅiயேவேள) புற ஊதாக் கதிர்கள் மூலம் சுத்தப் படுத்திவிடலாம்.
நன்றி: பேராசிரியர் கே. ராஜு
THANKS TO http://muruganthiru.blogspot.com/2009/08/blog-post_20.html
தமிழக அரசு நிறுவனம் விற்ற பதினாறு டன் மூலிகை வயாகரா

தமிழக அரசின் டாம்கோல் நிறுவனம் புதிதாக மூலிகை வயகரா ஒன்றை வெளியிட்டுள்ளது. லபூப் சகீர் என்பது இதன் பெயர். அல்வாவைப் போன்ற ரொம்ப டேஸ்டா இருக்குதாங்க. (அட, நிஜமாவே நான் இன்னும் சாப்பிட்டு பாக்கலைங்க…). வெளிவந்த சில நாட்களுக்குள்ளேயே ஸ்டாக்கும் தீர்ந்து, மூலப் பொருட்களும் தீர்ந்து போயிடுச்சாம். அவ்வளவு டிமாண்டு.
முதலில் ஏப்ரலில் கடைகளில் வந்தபோது அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் வாங்கியவர்கள் ‘அனுபவத்தில்’ அசந்து போய், விஷயம் பரவ ஆரம்பித்தது. பெரிதாக விளம்பரம் இல்லாமலேயே, இரண்டே மாதங்களில் பதினாறு டன் லபூப் சகீர் விற்று தீர்ந்து விட்டதாம். இப்போது டாம்கோல் நிறுவனத்தில் இதற்காகவே ஆட்கள் ராப்பகலாக லபூப் சகீர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்களாம்.
இது ஒரு யுனானி மருந்து. விலை மிகவும் குறைவு – முப்பது ரூபாய் தான் என்று சொல்கிறார்கள். இதில் பாதாம், பிஸ்தா, மற்றும் உலர வைக்கப் பட்ட பழங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிரதாம். இப்போது இதன் ‘மகிமை’ வெளிநாடுகளில் எல்லாம் பரவ ஆரம்பித்து விட்டது.
இது குறித்து சட்டசபையில் கூட சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது. அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.
அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.
நன்றி :http://thillana.wordpress.com/2009/06/30/laboob_sageer/



