ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி

மின்சார தமிழர்

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!
அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்... நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்...

உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்

களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?

1960-ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.


என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் "ப்ளூம் பாக்ஸ்' என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.

தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.

இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.
thanks to http://kiramthukakkai.blogspot.com/2011/07/blog-post_08.html

2ஜியைத் தொடர்ந்து கேஜி...!

2ஜி விவகாரமே இன்னும் முடிந்தபாடில்லை. அதற்குள்ளாக கேஜி விவகாரத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை. கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் பெட்ரோலியப் பொருள்களை எடுக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியதில் அரசுக்கு மிகமிகக் குறைந்த லாபம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் தணிக்கைத் துறை இப்போது எழுப்பியிருக்கும் கேள்வி.""தனியார் துறைக்காக விதிமுறைகளை ஏன் இவ்வளவு மோசமாக வளைக்கிறீர்கள்'' என்று தணிக்கைத் துறை கேட்டிருப்பது, ஒவ்வொரு குடிமகனின் மனதில் எழும் கேள்வியாகத்தான் இருக்கிறது.

தனியார் துறை என்றாலே, குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாகப் பெருந்தொழில் செய்யும் இந்தியத் தனியார் நிறுவனங்கள் என்றால் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குஷி பிறந்து விடுகிறது. தனியார் துறைக்கு எவ்வளவு உச்சகட்ட லாபம் கிடைக்குமோ அந்த அளவுக்குப் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, அவர்களை வாழ வைப்பதில் போட்டி போடுகிறார்கள்.

கிருஷ்ணா - கோதாவரி டி6 எனக் குறிக்கப்படும் இத்திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் படிப்படியாகச் செய்யும் முதலீடு ரூ.45,000 கோடி என்று இருப்பினும், இதிலிருந்து வெளியாகும் உற்பத்திக்கு ஏற்ப அரசுக்குக் கிடைக்கும் லாபத்தின் பங்கு வெறும் 5 விழுக்காடு அல்லது 10 விழுக்காடு என்று இருக்கிறது. இது குறித்துத்தான் தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்பியிருக்கிறது. இது அரசு கருவூலத்துக்குப் பெரும்இழப்பு என்று கூறியுள்ள தணிக்கைத் துறை இதன் அளவு குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.தனியார் நிறுவனம் அதிக முதலீடு செய்வதற்காக நமது லாபத்தைக் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அந்த முதலீட்டுக்காக அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. ஆனால், அரசாங்கத்துக்கு ஏதோ காவல் நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதைப் போல, பசியாறட்டும் என்று பரிதாபத்தில் கொடுப்பதைப்போலக் கொடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்த ஒப்பந்தங்களின் நுட்பமான தகவல்களைக்கூட அரசு வெளியிடுவதில்லை என்பதால் மக்களுக்கு இதுபற்றி முழுவிவரம் தெரியவருவதே கிடையாது. இதுபோன்று, தணிக்கைத் துறை போன்ற அமைப்புகளோ அல்லது பத்திரிகைகளோ இத்தகைய பாரபட்சமான ஒப்பந்தங்களை அம்பலப்படுத்தினால் மட்டுமே வெளியுலகுக்குத் தெரியவருகிறது. இந்தச் சட்டங்களை வளைப்பதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைப்பதோடு, அரசியல்வாதிகளுக்குக் கடன் கொடுக்கவும், அவர்களது நிறுவனங்களில் அதிகமான தொகை கொடுத்துப் பங்குகளை வாங்குகிறார்கள் என்பதும் இந்தியாவில் எல்லோருக்கும் புரியவைத்திருக்கிறது 2ஜி விவகாரம். ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, இதுபோல நிறைய நிறுவனங்கள் இந்தியாவைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்திய அரசுக்கோ, வெறும் சொற்ப லாபம்தான் கிடைக்கிறது.


பூமியிலிருந்து பெட்ரோல் எடுப்பதில் மட்டுமல்ல, கனிமங்கள் எடுப்பதிலும் மிகப்பெருமளவு சட்டங்கள் வளைக்கப்படுகின்றன. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாது பிரச்னை. இந்தியாவில் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் இரும்புத்தாது ஏற்றுமதியாகிறது என்றால், அதில் 30 விழுக்காடு கர்நாடகத்திலிருந்து செல்கிறது. இந்தத் தாதுக்கு கர்நாடக அரசு நிர்ணயித்துள்ள கனிம உரிமத் தொகை (ராயல்டி) மிகவும் குறைவு. ஒரு டன் இரும்புத்தாதுக்கு தரத்துக்கு ஏற்ப ரூ.17 முதல் ரூ.27 வரை கிடைக்கும். ஆனால் இந்த இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்படும்போது கிடைக்கும் விலை ஒரு டன்னுக்குக் குறைந்தபட்சம் 100 அமெரிக்க டாலர்கள். அதாவது ஏறக்குறைய ரூ.5000. இவ்வளவு வித்தியாசம் ஏன் இருக்க வேண்டும்?இதேபோன்று, கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள்.

உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் எந்தக் கணக்கு வழக்கும் கிடையாது. சாலை அமைக்கச் செய்த முதலீட்டைவிட இருமடங்கு முதலீடு குறுகிய காலத்தில் கைக்கு வந்தும்கூட, அரசியல்வாதிகள் ஆதரவுடன் சுங்கக் கட்டணம் காலவரம்பில்லாமல் தொடர்கிறது.தனியார் நிறுவனங்கள் பூமியிலிருந்து பெட்ரோலியப் பொருள்கள் எடுப்பதிலோ அல்லது கனிமம் எடுப்பதிலோ நிறைய முதலீடு செய்து இயந்திரங்கள் மற்றும் ஆள்பலத்தை நியமிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இதற்கெல்லாம் அதிகபட்சமாக எவ்வளவு தொகை போகும், அவர்களுக்கு எவ்வளவு தொகை மிஞ்சும் என்பதைக் கணக்குப்போடத் தெரியாதவர்களா நமது அதிகாரிகள்? தெரிந்திருந்தால், ஏன் இந்தியாவைச் சுரண்ட அனுமதிக்கிறார்கள்? அரசியல்வாதிகள் தலையீடு காரணம் என்றால், ஏன் அதுபற்றி வெளியே சொல்ல மறுக்கிறார்கள்?இதுபோன்ற நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் அநேகமாக அதிகார வர்க்கத்தின் ஆமோதிப்புடனும், மறைமுக ஆதரவுடனும்தான் நடைபெறுகின்றன. இதனால் மறைமுகமான ஆதாயங்களை அதிகாரிகள் பெறுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை. கடைசியில் விசாரணை, வழக்கு என்று மாட்டிக்கொள்வது என்னவோ அரசியல்வாதிகள் மட்டும்தான். "சென்னை மாநகர மேம்பால ஊழல்' விசாரணைபோல, அதிகாரிகள் தங்களது சக அதிகாரிகளைக் காப்பாற்றும் விதத்தில் வழக்குத் தொடர்ந்து ஊழலை ஒன்றுமே நடக்காததுபோல மூடி மறைத்து விடுகிறார்கள். காலங்காலமாக இதுதான் நடைபெற்று வருகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அதிகாரிகளுக்கும் சிறைத் தண்டனை கிடைத்தால் ஒருவேளை இந்த நிலைமை மாறுமோ என்னவோ? இந்தியா உண்மையாக முன்னேற வேண்டுமானால் முதலில் உடைக்கப்பட வேண்டியது தொழிலதிபர்கள் - அதிகாரிகள் - அரசியல்வாதிகள் கூட்டணிதான். அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன?
நன்றி http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=432267&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

எத்தனால் வாகன எரிபொருளாக உற்பத்தி செய்ய

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியும்

First Published : 01 Jun 2011 01:51:41 AM IST


பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைக்கும்பொருட்டு பிரேசிலில் 1927-ம் ஆண்டே எத்தனால் வாகன எரிபொருளாக விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. 1942-43-ல் எத்தனால் உற்பத்தி 16,000 டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் உற்பத்தியை 5 கோடி டன்னாக உயர்த்தத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் இன்றைய எத்தனால் உற்பத்தி 4,80,000 டன்தான். 2.5 கோடி டன் எங்கே? 4.8 லட்சம் டன் எங்கே? உற்பத்தியைப் பெருக்குவதற்கு மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. ஆனால், மாதமொரு முறை பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தத் தவறுவதில்லை.இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100 ஆகவும், டீசல் விலை ரூ. 70 ஆகவும் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் செயலிழந்து நிற்கின்றனர்.எத்தனால் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு 1982-லேயே தமிழ்நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் தமிழக அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. இன்றுவரை அந்தக் குழுமத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. 1984-ல் ஏற்றுமதிக்கான அனுமதியை மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பிக்க அனுமதி கொடுத்துத் திட்டத்தை நிறைவேற்றாமல் இருக்க என்னென்ன இடையூறுகள் உண்டோ அவ்வளவையும் செய்து திட்டம் வராமலேயே செய்துவிட்டனர்.2007-ல் திட்டத்தின் மகிமையை உணர்ந்து திட்டத்துக்கான அனுமதியை இந்தக் குழுமத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு வழங்கியது. எங்கு நிதீஷ் குமாருக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று கருதித் திட்டத்தை நிறைவேற்றாத வண்ணம் மத்திய அரசு தலையிட்டுத் திட்டத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இவ்வாறு இருப்பின் எப்படி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலும்?பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பப்படி பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்து கொள்ளலாம். எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 20 தான். இது மட்டுமன்றி, எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர். மற்ற நாடுகளைப் பார்த்தாவது இந்தியா திருந்துமா என்பது விடை காண முடியாத கேள்வி.24% பெட்ரோலுடன் எத்தனால் கலந்து வாகனத்தில் எந்த மாற்றமுமின்றி வாகனத்தை ஓட்டலாம். வாகனத்தின் திறன் கூடுமேயொழியக் குறையாது. 85% எத்தனாலுடன் 15% பெட்ரோல் மட்டும் கலந்து உபயோகிக்கலாம். இதற்கு என்ஜினில் மாற்றங்கள் செய்ய வேண்டும். எத்தனால் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்கான என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. போர்டு குழுமம் பிரேசிலில் இந்த என்ஜின்களை உற்பத்தி செய்கிறது. எனவே, சென்னையிலும் போர்டு நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இயலும்.இந்திய அரசு எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ. 27 என்று நிர்ணயித்துள்ளது. ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,500 கொடுக்க வேண்டுமெனில் எத்தனால் விலையைக் குறைந்தபட்சம் ரூ. 32 ஆக நிர்ணயிக்க வேண்டும். பங்கில் எத்தனால் விலை ரூ. 32; மத்திய அரசின் வரி 16% - ரூ. 5.12; பங்குக்குக் கமிஷன் 5% - ரூ. 1.85; போக்குவரத்துச் செலவு 50 பைசா மற்றும் இதர செலவுகள் 53 பைசா ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் விலை ரூ. 40.அமெரிக்காவில் ஒரு லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்து கொடுத்தால் உற்பத்தியாளருக்கு ஒரு லிட்டருக்கு ரூ. 6 அமெரிக்க அரசு இனாமாக வழங்குகிறது. 2022-ல் 11 கோடி டன் எத்தனால் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. மக்காச்சோளம் மட்டுமன்றி "ப்ரையாரிக்ராஸ்' என்ற புல்லையும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், இந்தியாவில் இந்திய அரசு ஒரு லிட்டருக்கு ரூ. 5.12 வரியாக உற்பத்தியாளரிடமிருந்து வாங்குகிறது. இந்தச் சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எப்படி இந்தியாவில் குறைக்க முடியும்?எத்தனால் கலப்பதால் மாசு 50% கட்டுப்படுத்தப்படும். மத்திய அரசின் வரியை நீக்கிவிட்டால் எத்தனால் ஒரு லிட்டர் ரூ. 35-க்குக் கிடைக்கும். மக்கள் ரூ. 70-க்கு பெட்ரோல் போடுவதைவிட்டு ரூ. 35-க்கு எரிபொருளைப் பயன்படுத்தி மகிழ்வர். 24% எத்தனாலைக் கலக்கும்பொழுது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.75 குறையும். 85% எத்தனாலைக் கலக்கும்பொழுது ஒரு லிட்டருக்கு ரூ. 30 குறைந்து ரூ. 40-க்கு வாகன எரிபொருள் கிடைக்கும். இதைச் செய்ய பிரேசிலைப்போல் ஒரு குடியரசுத் தலைவர் இந்தியாவுக்குத் தேவை.எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைச் சத்துள்ள எல்லா பொருள்களும்.உற்பத்தியும், லாபகரமுமான பொருள்கள் கரும்பு மற்றும் மக்காச்சோளம் மட்டுமே. இவை இரண்டிலும் கரும்பின் திறனே அதிகம். இந்தியா, பிரேசிலில் கரும்பு உற்பத்தியே அதிகம். அமெரிக்காவில் மக்காச்சோளம் பரவலாகப் பயிரிடப்படுவதால் எத்தனால் உற்பத்திக்கு மக்காச்சோளமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன் கரும்பிலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள். (கரும்பு ஒரு டன்னுக்கு விலை ரூ. 2,500) சர்க்கரை - 100 கிலோ; சக்கை - 280 கிலோ. இதிலிருந்து 50 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொலாஸஸ் - 40 கிலோ. இதிலிருந்து 12 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும். மட்டி - 50 கிலோ.எத்தனாலைத் தமிழகம் பயன்படுத்தத் தொடங்கினால் 10 ஆண்டுகளில் ஆண்டு ஒன்றுக்கு 40 லட்சம் டன் தேவைப்படும். மொலாஸûஸ மட்டும் பயன்படுத்தி 40 லட்சம் டன் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டுமெனில் 4,156 கோடி டன் சர்க்கரையும் உடன் உற்பத்தியாகும். எனவே, இத்திட்டம் சாத்தியப்படாது.ஆகவே, இன்றுள்ள கரும்பு உற்பத்தியாகும் நில அளவை வைத்தே ஏக்கருக்கான உற்பத்தித் திறனைப் பெருக்கி 40 லட்சம் டன் எத்தனாலை 5 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய இயலும். அதற்கு கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யாமல் நேரடியாக எத்தனாலை உற்பத்தி செய்வோமானால் இது சாத்தியமான திட்டம் மட்டுமன்றி, உடன் அமல்படுத்தவும் முடியும்.இதற்கான முடிவை அரசு உடனே எடுக்குமானால், பெட்ரோல், டீசல் விலையை வெகுவாகக் குறைத்துவிட முடியும். ஒரு டன் மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தியாகும் பொருள்கள் (ஒரு டன் மக்காச்சோளத்தின் விலை ரூ. 12,000) எத்தனால் 360 லிட்டர்; மக்காச்சோள எண்ணெய் - 25 கிலோ; கழிவு (தீவனம்) - 330 கிலோ.மக்காச்சோளத்தை எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்த இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை. மக்காச்சோளத்திலிருந்து மிக உயர்ரக குடிசாராயத்தைத் தயாரிக்கலாம்.தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் விளைவிக்கப்படுகிறது. சராசரியாக 4 லட்சம் டன் உற்பத்தியாகிறது. இதிலிருந்து 1,15,200 டன் குடிசாராயம் தயாரிக்க முடியும். மக்காச்சோளத்துக்கு டன்னுக்கு ரூ. 12,000 உறுதி செய்யப்பட்டால் உற்பத்தியை 8 லட்சம் டன்னாக உயர்த்த இயலும்.தமிழகத்தின் குடிசாராயத் தேவையே 2,50,000 டன்தான். இப்போது குடிசாராயம் மொலாஸஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கும்.தமிழகத்தில் 7.2 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஏக்கருக்கு 40 டன் விளைகிறது. இதிலிருந்து உற்பத்தியாகும். ஆல்கஹால் 2,76,400 டன்.இது குடிசாராயத்துக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குடிசாராயத்துக்கு மக்காச்சோளத்தைப் பயன்படுத்துவோமேயானால் மொலாஸûஸ முழுமையாகப் பயன்படுத்தலாம்.இதன் மூலம் ரசாயனத் தொழிற்சாலை அபரிமிதமான வளர்ச்சியை அடையும். உற்பத்தியாகும் பொருள்களின் விலைகளையும் வெகுவாகக் குறைக்க இயலும். குறிப்பாக, பிளாஸ்டிக் பொருள். எத்தனால் உற்பத்தியைக் கரும்பிலிருந்து நேரடியாக உற்பத்தி செய்து கொள்ளலாம்.கரும்பு உற்பத்தியை இப்பொழுது விளைவதைவிட இரு மடங்காக நிச்சயம் உயர்த்த வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏக்கருக்கு 120 டன் என்பது பெரிய செய்தியல்ல. இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் அவைகளைப் பயன்படுத்தாமல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் மர்ம முடிச்சுகளை அவிழ்த்தால் இந்தியாவில் 2ஜியை விட மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்.கட்டுரையாளர்: கால்நடை மருத்துவர்.

நன்றிhttp://dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=425473&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

ஆறே நாட்களில் ஒரு ட்ராக்டர் செய்ய முடியும்!...

மார்சின் ஜகுபோவ்ச்கி இப்படி அவர் பெயரை எழுதுவது சரியா எனத்தெரியாததால் ஆங்கிலத்திலேயே இனி தொடராலாம். Marcin Jakubowski விவசாயம் செய்ய ஆசைப்பட்டு ஒரு பழைய ட்ராக்டரை வாங்கி அதனை மிகுந்த செலவில் ரிப்பேர் செய்து பண்ணையில் ஓட்டினால் மறுபடி ரிப்பேர். இது ஒரு கட்டத்தில் கட்டுப்படி ஆகாமல் போகவே, இதற்க்கான மாற்று வழியாக எளிய தேவையற்ற உபகரணங்களைக் கொண்டு சொந்த முயற்சியில் ஒரு ட்ராக்டரை வடிவமைத்திருக்கிறார். அது வெற்றிகரமாக கைகொடுக்கவே இப்போது கிட்டத்தட்ட ஐம்பது எளிய கருவிகளை கண்டுபிடித்து அது எல்லோருக்கும் உபயோகமாகட்டும் என அதன் விபரங்களை OPEN SOURCE ஆக கொடுத்து இருக்கிறார்.

நன்றி :http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_27.ஹ்த்ம்ல்


காற்றாலைகளுக்கு ரூ 1200 கோடி பாக்கி வைத்த மின்வாரியம்

தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. ஆனால், இவர்களுக்கு ரூ 1200 கோடியை அரசு பாக்கி வைத்துள்ளதால், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை, நெல்லை, கன்யாகுமரி, தூத்துக்குடி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இவற்றிலிருந்து தினமும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 30 சதவீதம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது.

காற்று சாதகமாக உள்ள போதுதான் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி சாத்தியமாகும்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரையுள்ள 6 மாத காலத்தில் காற்றாலைகளின் மொத்த உற்பத்தியில் 85 சதவீதமும், மீதி 15 சதவீத மின்சாரம், அக்டோபர் முதல் ஏப்ரல் வரையுள்ள காலங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சொந்த தொழிற்சாலைகள்:

தமிழகத்தில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்கள் தாங்களே சொந்தமாக தொழிற்சாலைகள் வைத்துள்ளன. மீதி 50 சதவீத காற்றலை நிறுவனங்கள் தொழிற்சாலைகளை வைத்திருக்கவில்லை.

தொழிற்சாலைகள் வைத்துள்ள காற்றாலை நிறுவனங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கு கொடுத்து விட்டு அதே தொகைக்கு தங்கள் தொழிற்சாலைக்கு தேவைப்படும் மின்சாரத்தை எடுத்துக் கொண்டு அதற்கான பில் செலுத்துவதில்லை.

தொழிற்சாலை இல்லாத காற்றாலை நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அப்படியே மின்சார வாரியத்திற்கு கொடுத்து விடுகின்றன.

அப்படிக் கொடுக்கப்பட்ட மின்சாரத்துக்குதான் இதுவரை ரூ 1200 கோடியை பாக்கியாக வைத்துள்ள மின்சார வாரியம்!

கூடுதலாக 1000 மெகாவாட்:

கடந்த 2009-ம் ஆண்டு 2200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வந்த காற்றாலைகள் 2010-ம் ஆண்டு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இந்த ஆண்டு சுமார் 3 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய காற்றாலை நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன.

அதற்கேற்றாற் போல கூடுதலாக காற்றலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மின்சார வெட்டு குறையும் என்று தெரிகிறது.

ஆனால் கடந்த 10 மாதங்களாக உரிய முறையில் பணம் கொடுக்காததால், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவரும், மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினருமான கே.கஸ்தூரி ரங்கையன் கூறுகையில், " கடந்த 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் வரைதான் மின்வாரியம் காற்றாலை மின்சாரத்துக்கான தொகையை பட்டுவாடா செய்யதுள்ளது. அதன்பிறகு பணம் செலுத்தவில்லை. மின்சார வாரியம் இன்னும் ஆயிரத்து 200 கோடி ரூபாயை காற்றாலைகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டும்.

இதன் காரணமாக வங்கிகளில் கடன் வாங்கி காற்றாலைகளை அமைத்தவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இதுகுறித்து கேட்டதற்கு மின்சார வாரியத்தில் போதிய நிதி இல்லாததால் பணத்தை பட்டுவாடா செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

குறைந்த தொகைதான்...

காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு தமிழக மின்சார வாரியம் 2 ரூபாய் 75 பைசா தருகிறது. 2006-ம் ஆண்டுக்கு முன்பு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2,75-ம், 2006 முதல் 2009 வரை காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.95-ம், 2009-க்கு பிறகு காற்றாலைகள் அமைத்தவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.39-ம் தமிழக மின்சார வாரியம் வழங்கி வருகிறது.

ஆனால் மராட்டியம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் காற்றாலை மின்சாரத்துக்கு அதிக தொகை வழங்குகின்றன. மற்ற மாநிலங்களில் காற்றாலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை வெளி மார்க்கெட்டில் ஒரு யூனிட் ரூ.6 முதல் ரூ.15 வரை விற்கிறார்கள். இது போன்ற நிலைமை தமிழகத்தில் இல்லை.

எனவே காற்றாலைகளுக்கு ரூ. ஆயிரத்து 200 கோடி பாக்கி வைத்துள்ள மின்சார வாரியம் அந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேனி, தென்காசி, தாராபுரம் ஆகிய பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கும் உதவ வேண்டும்",என்றார்.

கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உடனே மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியம், அந்த மின்சாரத்தையே உற்பத்தி செய்பவர்களுக்கு 10 மாதங்களாக பாக்கி வைத்திருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் மின் உற்பத்தியாளர்கள்!
தங்க டு http://thatstamil.oneindia.in/news/2011/04/25/eb-due-rs-1200-cr-pending-wind-mill-owners-aid0136.html

அறிவியல் :- இனி...கடல்நீர் எரிபொருள்..!

John Kanzius எனும் ஒரு அமெரிக்க அறிவியலாளர், எந்த மைக்ரோ-ரேடியோ அலைகளால் கேன்சர் அல்லது ட்யூமர் வருகிறது எனப்படுகிறதோ அதே ரேடியோ அலைகள் மூலம் கேன்சர் கட்டியை அழிப்பது பற்றிய... அதாவது, "முள்ளை முள்ளால் எடுத்தால் என்ன..?" என்று ஆராய முற்பட்டு... அதில், எதிர்பாரதவிதமாக - ஒரு இனிய விபத்தாக - இந்த கடல்நீர் எரிபொருளாகும் அதிசயத்தை கண்டுபிடிக்கிறார்..!

முதலில் அவர் ஒரு Radio Frequency Generator (RFG) ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ரேடியோ அலைகளை சரியான wavelength/frequency-யில் உற்பத்தி செய்து அதை கேன்சர்/ட்யூமர் செல்களில் சரியான அளவில் துல்லியமாக செலுத்தி அதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, ரேடியோ அலைக்கற்றை பாதையின் அருகே இருந்த ஒரு சோதனைக்குழாயில் தண்ணீர் condense ஆவதை காணுகிறார். ஆஹா..! அப்படியெனில் கடல்நீரிலிருந்து Desalination (Flash Distillation method) மூலம் கடல்நீரை குடிநீராக்குவது நியாபகத்துக்கு வர, உடனே கடல் நீரை சோதனைக்குழாயில் எடுத்து வந்து RFG உருவாக்கி அனுப்பும் ரேடியோ அலைக்கற்றை பாதையில் வைத்த போதுதான்... அந்த சரித்திரப்புகழ் பெற்ற அதிசய விபத்து நடந்தது..! சோதனைக்குழாயில் இருந்த கடல்நீர்... தீ..ப்..ப..ற்..றி.. எ..ரி..ய.. ஆ...ர.. ம்பித்தது..!!


பொதுவாக கடல்நீர் மீது எரியும் தீ பந்தத்தை நாம் எறிந்தால் மொத்த கடல்பரப்பும் பற்றிக்கொள்ளுமா..? இதென்ன புதுக்கேள்வி..? பற்றிக்கொள்ளதுதான்..! ஆனால், இதற்கு காரணமாக இருக்கும் அறிவியல் என்ன என்று பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டது. அதன் சூட்சுமம், ரேடியோ அலைக்கற்றைகளில் மட்டும் இல்லை...! கடல்நீரின் உப்புத்தன்மையிலும் உள்ளது. அதாவது, சாதாரண நிலையில், கடல்நீரில் கடல் உப்பும் தண்ணீரும் stable composition-ல் தான் இருக்கும். ஆனால், John Kanzius-ன் RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றை இந்த நிலையான தன்மையை சிதைத்து உப்புகளுக்கும் ஹைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடையேயான அணுப்பினைப்பை உடைத்து விடுகிறது. அப்போது வெளியாகும் ஹைட்ரஜன் வாயுவை RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையின் வெப்பம் எளிதில் தீப்பற்றிக்கொள்ளச்செய்து எரிய வைக்கிறது..! ரேடியோ அலைக்கற்றை தொடர்ந்து கடல்நீர் மீது பாய்ச்சப்பட தீ தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கிறது..!


கீழ்க்காணும் வீடியோவில் அப்போது அமெரிக்காவில் வந்த செய்தியையும் இந்த ஆய்வு எப்படி நடந்தது என்ற விளக்கமும் காணுங்கள்.
இச்சோதனையை பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளும் தனியாக பரிசோதித்து சரிபார்த்துவிட்டு, John Kanzius சொன்னது முற்றிலும் உண்மை என்று நிரூபித்துள்ளனர். RFG வெளியிடும் ரேடியோ அலைக்கற்றையை பாய்ச்சும் வரை கடல்நீரை தொடர்ந்து எரிய வைக்கலாம். இத்தீயின் வெப்பம் 3000F வரை கிடைக்கிறது.

டிஸ்கி :-

இனி கடல்நீர் எண்ணெய் எரிபொருளுக்கு மாற்றா..? 'ஆம்' என்று உடனே கூற முடியவில்லை..! காரணம், இதில், இப்போதுள்ள ஒரே பிரச்சினை, RFG-க்கு தரப்படும் input energy-க்கான செலவு, தற்போது பெட்ரோல்/டீசலுக்கு செல்வழிப்பதைவிட அதிகமாம். பிற்காலத்தில், இதன் செலவு குறையுமானால், இனி நம் மோட்டார் வாகனங்கள் கடல்நீரில் ஓடுமா.. என்றால் ஓடும்..! ஆனால், அது எப்படி அவ்வளவு சீக்கிரம் வரும்..? அப்புறம் தினமும் மில்லியன் பேரல் கணக்கில் இறக்குமதி செய்யும் அமெரிக்காவின் Oil Refinery-களுக்கு வேலை வேண்டாமா..? ஒரு லோடு லாரி அரிசியை நூறு ரூபாய்க்கு வாங்கி அதை மாவாக்கி பத்து மில்லியன் இடியாப்பம் செய்து விற்று பில்லியனராக வேண்டாமா..? என்னா சகோ..!

முதலில் பூமியில் உள்ள எண்ணெய் வளம் எல்லாம் வற்றட்டும் சகோ..! அப்புறம், உலக மக்கள் எல்லாம் எரிபொருளுக்கு தவிக்கும்போது, ஆபத்பாந்தவனான அமெரிக்காவின், இந்த 'முன்னமே Patent போடப்பட்ட தொழில்நுட்பத்தை' உலக நாடுகள் எல்லாம் கைகட்டி அதற்குரிய கப்பம் கட்டி வாங்கிகொள்வார்கள். இதற்கான... " 4-5-6 (!?)ஒப்பந்தத்தில் " அனைத்து நாட்டு தலைவர்களும் அதற்கு முன்னமேயே கையொப்பமும் போட்டுமிருப்பார்கள் அல்லவா..!

ஆனால், ஒருவிஷயம்...! பாவம்... பல கடற்கரை இல்லாத துரதிர்ஷ்ட நாடுகள்..! அவர்கள் அதிக விலை கொடுத்து மற்றவர்களிடம் எரிபொருளுக்கான "குருட் கடல்நீர்" வாங்குவார்கள். அப்போது கடற்பரப்பும் கூறுபோட்டு விற்கப்படும் அல்லது ஏழை எளிய நாட்டின் கடற்பரப்பு, வல்லாதிக்க நாடுகளால் ஆக்கிரமிக்கப்படும்..! கடல்நீருக்காக பிற்காலத்தில் போர் கூட நடக்கலாம்..! அதில், பறக்கும் அதிபயங்கர மெகா சைஸ் 'RFG ஆயுதங்கள்' மூலம் கடல்கள் தீ மூட்டப்படலாம்..! After all we are all CITIZENS OF THIS WORLD..!
thanks to http://pinnoottavaathi.blogspot.com/2011/04/blog-post_10.html

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ்

எப்படி தயாராகிறது ப்ரிங்கிள்ஸ் சிப்ஸ் (FM)1

சிப்ஸ் என்று சொன்னாலே நமக்கு நாவில் எச்சில் ஊறும் அதிலும் ப்ரிங்கல்ஸ் போன்ற சிப்ஸ் பார்க்கும் போது இதை எப்படி தயார் செய்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் அதை தீர்த்து வைத்தது இந்த யுட்யுப் வீடியோ பார்க்க ஏதோ எளிமையாக தெரியும் விசயமும் அதை தயாரிக்கும் போது அவர்கள் மேற்கொள்ளும் தொழிநுட்ப விஷயங்கள் பார்க்கும் போது பிரமிப்பை உண்டாக்கும்